ஐ.பி.எல்.2025: 4 இடங்கள்.. 8 அணிகள் போட்டி.. யாருக்கு வாய்ப்பு அதிகம்..?

9 hours ago 4

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 20 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

மற்ற அணிகளில் யாருக்கு வாய்ப்பு அதிகம்? என்பது குறித்து இங்கு காணலாம்..!

1. மும்பை இந்தியன்ஸ்:

5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இம்முறை தொடக்க கட்டத்தில் சில தோல்விகளை தழுவியது. அதன்பின் எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றுள்ளது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் கண்டு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 6-வது கோப்பைக்கு குறிவைத்துள்ள மும்பை அணி எஞ்சியுள்ள 3 போட்டிகளில் ஒரு வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிடும். இதனால் பல் வாய்ந்த மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குள் எளிதில் நுழைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி கண்டு புள்ளி பட்டியலில் 2-வது (14 புள்ளிகள்) இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலே அந்த அணி பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்து விடும். இதனால் பெங்களூரு அணி பிளே ஆப் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

3. பஞ்சாப் கிங்ஸ்:

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி மற்றும் ஒரு போட்டி ரத்தான நிலையில் (மழை காரணமாக) 13 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி, மீதமுள்ள 4 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை எட்டிவிடும். மாறாக ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

4. குஜராத் டைட்டன்ஸ்:

முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 9 போட்டிகளில் 6 வெற்றி மற்றும் 3 தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் (12 புள்ளிகள்) உள்ளது. மீதமுள்ள 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்பதால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும் என்று கருதப்படுகிறது.

5. டெல்லி கேப்பிடல்ஸ்:

தொடக்க கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வந்த டெல்லி அணி தற்சமயம் தடுமாறி வருகிறது. 10 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் பெற்று (6 வெற்றிகள்) புள்ளி பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டிகளில் 2-ல் கட்டாயம் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் தகுதி பெற முடியும்.

6. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:

இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3 போட்டிகளில் கட்டாயம் வென்றாக வேண்டும். மாறாக 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி ஒரு போட்டி மழையால் ரத்தான நிலையில் (ஒரு புள்ளி) 9 புள்ளிகள் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீதமுள்ள 4 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். அதேவேளை 3 போட்டிகளில் வென்று 15 புள்ளிகள் பெறும் பட்சத்தில் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

8. சன்ரைசர்ஸ் ஐதராபாத்:

இதுவரை 9 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகள் (3 வெற்றி) மட்டுமே பெற்றுள்ள ஐதராபாத் மீதமுள்ள 5 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒன்றில் தோல்வியடைந்தாலும் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய சிக்கலாகி விடும்.

Read Entire Article