
அமராவதி,
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத் பொதுவான தலைநகராக செயல்பட்டு வந்தது. இதையடுத்து, ஆந்திராவிற்கு புதிய தலைநகர் அமைக்கப்படும் என்று சட்டமன்ற தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு கூறினார். தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு வெற்றிபெற்று மாநில முதல்-மந்திரியானார்.
இதையடுத்து, ஆந்திராவின் புதிய தலைநகராக அமராவதி அறிவிக்கப்பட்டது. தலைநகருக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமராவதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆந்திராவில் 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் கனவு திட்டமான அமராவதியில் பசுமை தலைநகர், கல்வி உள்பட பிற நிறுவனங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், ரெயில்வே திட்டங்கள் உள்பட 94 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
அமராவதி மறுகட்டமைப்பிற்காக சட்டசபை, தலைமை செயலகம், ஐகோர்ட்டு கட்டிடம், நீதிபதிகள் குடியிருப்பு உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதேபோல், முடிவுற்ற பணிகளையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.