துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் கடந்த ஆண்டிற்கும் (2024) மூன்று வடிவிலான போட்டியிலும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுருக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு விருதிற்கும் 4 பேரை பரிந்துரைத்து பட்டியலை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் 2024-ம் ஆண்டிற்கான ஐ.சி.சி. விருதுகள் வென்றவர்களின் விவரம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் (24-ம் தேதி) 28-ம் தேதி வரை அறிவிக்கப்படுகிறது.