உ.பி. மந்திரியின் சகோதரியிடம் பணமோசடி; சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ., மனைவி கைது

3 hours ago 1

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் மந்திரியாக இருப்பவர் நிதின் அகர்வால். இவருடைய சகோதரி ருச்சி கோயல்.

இவரிடம் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவி ரீனா பாசி ஆகிய இருவரும் பிளாட் ஒன்றை வாங்கி தருகிறோம் என கூறி, ரூ.49 லட்சம் அளவுக்கு பணம் மோசடி செய்துள்ளனர்.

இதுபற்றி கோயல் அளித்த புகாரின் பேரில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு, 2 பேருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்நிலையில், ஹர்தோய் போலீசார், சுபாஷ் பாசி மற்றும் அவருடைய மனைவியை கைது செய்தனர்.

சுபாஷ், 2012 முதல் 2017 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், சமாஜ்வாடி கட்சி சார்பில் சையத்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அவர், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான நிஷாத் கட்சியில் தற்போது உள்ளார். இந்நிலையில், கோயல் அளித்துள்ள புகார் அடிப்படையில் அவரும், அவருடைய மனைவி ரீனாவும் கைது செய்யப்பட்டனர்.

Read Entire Article