கொஞ்சம் பொறுங்கள்... 22 வயது முகமது ஷமியை பார்ப்பீர்கள் - அர்ஷ்தீப் சிங்

4 hours ago 2

கொல்கத்தா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் காயத்தில் இருந்து மீண்டு 14 மாதங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி களம் காணுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் இன்னும் முழு உடல்தகுதியை எட்டவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணிக்காக கம்பேக் கொடுக்க காத்திருக்கும் முகமது ஷமி குறித்து பேசிய அர்ஷ்தீப் சிங் கூறுகையில், "எல்லோரும் கொஞ்சம் பொறுங்கள். மீண்டும் 22 வயது முகமது ஷமியை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் பயிற்சியின்போது அவரது கையில் இருந்து வெளியேறும் பந்தின் வேகத்தை பார்த்தேன். அந்த வேகமும், பந்து வெளியேறும் விதமும் என்னை பிரமிக்க வைத்தது. மீண்டும் முகமது ஷமி மிகச்சிறப்பான முறையில் தயாராகி வந்துள்ளார். எனவே அவருடைய பந்துவீச்சு முன்பை விட மிகச்சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.

Read Entire Article