ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீராங்கனை விருது 2024: பரிந்துரை பட்டியலில் இந்திய வீராங்கனை

3 weeks ago 4

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை' விருதுக்கு தகுதியான வீராங்கனையை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது. அதில் ஒரே ஒரு இந்திய வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா இடம் பிடித்துள்ளார்.

மேலும், இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட், இலங்கையின் சமாரி அத்தபத்து, ஆஸ்திரேலியாவின் அன்னபெல் சதர்லேண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


Three fearless openers, one dynamic all-rounder

Who will take the crown for ICC Women's ODI Cricketer of the Year? #ICCAwardshttps://t.co/SWG280Iilg

— ICC (@ICC) December 29, 2024

Read Entire Article