ஐ.சி.சி. ஒருநாள் தொடர்கள்: மாபெரும் சாதனை படைத்த முகமது ஷமி

20 hours ago 1

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 49.4 ஓவர்களில் 228 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிரிடாய் 100 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 229 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சுப்மன் கில் 101 ரன்கள் அடித்தார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த ஆட்டத்தில் கைப்பற்றி 5 விக்கெட்டுகளையும் சேர்த்து ஐ.சி.சி. நடத்தும் ஒருநாள் தொடர்களான உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இதுவரை 60 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஜாகீர் கான் 59 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை முந்தி ஷமி முதலிடம் பிடித்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. முகமது ஷமி - 60 விக்கெட்டுகள்

2. ஜாகீர் கான் - 59 விக்கெட்டுகள்

3. ஜவகல் ஸ்ரீநாத் - 47 விக்கெட்டுகள்

4. ஜடேஜா - 43 விக்கெட்டுகள் 

Read Entire Article