ஐ.சி.சி. அக்டோபர் மாத சிறந்த வீரர், வீராங்கனை விருது; பரிந்துரை பெயர் பட்டியல் வெளியீடு

2 months ago 12

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதேபோல், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


Three Test heroes go toe-to-toe for ICC Men's Player of the Month honours for October 2024

More on the candidates

— ICC (@ICC) November 5, 2024


It's a race between three #T20WorldCup standouts for the ICC Women's Player of the Month award for October 2024

More on the nominees

— ICC (@ICC) November 5, 2024


Read Entire Article