
மும்பை,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - மோகன் பகான் அணிகள் மோத உள்ளன.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு கேரளாவில் நடைபெறும் ஆட்டத்தில் கேரளா - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோத உள்ளன.