புவனேஸ்வர்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெற்றது.
அதன்படி, புவனேஸ்வரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஒடிசா எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி கோல்கள் அடித்தன. இதன் காரணமாக இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. இறுதியில் இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.