ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; ஐதராபாத்தை வீழ்த்திய சென்னையின் எப்.சி

1 month ago 6

சென்னை,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி - ஐதராபாத் எப்.சி அணிகள் மோதின.

இந்த போட்டி தொடங்கிய 5வது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடித்து அசத்தியது. ஐதராபாத் அணியினர் பதில் கோல் திருப்ப பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சென்னை முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதிவரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி வெற்றி பெற்றது.

Read Entire Article