ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி. வெற்றி

3 hours ago 1

ஐதராபாத்,

3 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி. - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், பஞ்சாப் எப்.சி. அணி சார்பில் அலெக்ஸ் சாஜி ஆட்டத்தின் 41-வது நிமிடத்திலும், லூகா 56-வது நிமிடத்திலும், ஷாமி 86-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் ராம்லுஞ்சுங்கா ஆட்டத்தின் 90+4 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் எப்.சி. அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Read Entire Article