![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/08/38330430-10-isl.webp)
ஐதராபாத்,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டம் நடைபெற்றது.
அதன்படி மாலை 5 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் முகமதின் அணியை வீழ்த்தி ஐதராபாத் எப்.சி வெற்றி பெற்றது. தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - சென்னையின் எப்.சி அணிகள் மோதின.
தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் சென்னை அணி 2 கோல் அடித்தது. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் சென்னை முன்னிலை பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் சென்னை அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது. இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்றது.