மும்பை: 18வது சீசன் ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக 10 அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் காயங்கள் காரணமாக பல வேகப்பந்துவீச்சாளர்கள் ஐபிஎல்லில் ஆடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில், அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹ்சின் கான், ஆவேஷ் கான் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடற்தகுதி சான்று ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டுள்ளனர்.
தேசிய கிரிக்கெட் அகாடமி அவர்கள் முழு உடற்தகுதியைப் பெற்றுவிட்டதாக மருத்துவ அறிக்கை அளித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் அவர்கள் விளையாட முடியும். இதில் மொஹ்சின் கான் மற்றும் ஆவேஷ் கான் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. காயம் மோசமாக இருப்பதால் மயங்க் யாதவால் நிச்சயமாக ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட முடியாது எனக் கூறப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கையாக மாற்று வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூரை லக்னோ தேர்வு ‘செய்துள்ளது.ஏலத்தில் அவரை யாரும் எடுக்காத நிலையில், தற்போது மாற்று வீரராக ஷர்துல் தாகூருக்கு லக் அடித்துள்ளது. விரைவில் அவர் அணியில் இணைவார் என தெரிகிறது.
The post ஏலத்தில் விலை போகாத ஷர்துல் தாகூருக்கு அடித்த யோகம்: லக்னோ அணியில் இணைகிறார் appeared first on Dinakaran.