
மும்பை,
வர்த்தகப்போர் அச்சத்தால் இம்மாத தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அதன்பின்னர், பங்குச்சந்தை ஏற்றம்பெற தொடங்கியது. அந்த வகையில் இந்திய பங்குச்சந்தை இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 12 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 340 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 390 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 52 ஆயிரத்து 766 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 32 புள்ளிகள் உயர்ந்த பின்நிப்டி 25 ஆயிரத்து 313 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
10 புள்ளிகள் ஏற்றம் பெற்ற சென்செக்ஸ் 76 ஆயிரத்து 744 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 23 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 11 ஆயிரத்து 564 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 488 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பேங்க் எக்ஸ் 60 ஆயிரத்து 351 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தமாகி வருவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேவேளை, சர்வதேச அளவில் வர்த்தக நிலையற்ற தன்மை காரணமாக இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகர்கள் பலரும் லாபத்தை பதிவு செய்து வெளியேறி வருகின்றனர்