ஏர்இந்தியா விமானங்களில் உள்நாடு, வெளிநாடு டிக்கெட் கட்டணம் குறைப்பு: நாளை இரவு வரை முன்பதிவு சலுகை

3 hours ago 1

மீனம்பாக்கம்: ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ‘நமஸ்தே வேர்ல்டு’ திட்டத்தின்படி, நாளை (6ம் தேதி) நள்ளிரவு 12 மணிவரை இணையதள முகவரியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடு விமான பயணக் கட்டணங்கள் குறைக்கப்படும். இணையதளம் மூலமாக முன்பதிவு செய்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏர்இந்தியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ‘நமஸ்தே வேர்ல்டு’ திட்டத்தின்படி, நாளை (6ம் தேதி) வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி வரையில், இந்நிறுவனத்தின் www.airindia.com எனும் இணையதள பக்கத்தில் ஏர்இந்தியா விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள், தள்ளுபடி விமான கட்டணங்கள் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகை பயண டிக்கெட்டுகளை இம்மாதம் 12ம் தேதியில் இருந்து வரும் அக்டோபர் 31ம் தேதி வரை பயன்படுத்தி, ஏர்இந்தியா விமானங்களில் பயணிக்கலாம். இச்சலுகை பயண விமான டிக்கெட்டுகள், எகனாமி வகுப்பில் ரூ.1,499க்கு துவங்குகிறது. பிரீமியம் எகானமி டிக்கெட்டுகள் ரூ.3,749ல் இருந்தும், பிசினஸ் கிளாஸ் எனும் உயர் வகுப்பு டிக்கெட்டுகள் ரூ.9,999ல் இருந்தும் துவங்குகிறது. மேலும், சர்வதேச நாடுகளுக்கு செல்லும் ஏர்இந்தியா விமானங்களில் பயணிகள் சென்று திரும்பி வருவதற்கு, ரூ.16,213லிருந்து விமானக் கட்டணங்கள் துவங்குகின்றன. இதில், உள்நாட்டு பயண சலுகை டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

அதோடு, ஏர்இந்தியா ஏர்லைன்சின் www.airindia.com எனும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.1000 சிறப்பு தள்ளுபடி கிடைக்கும். இந்த சிறப்பு விமான கட்டண சலுகை நாளை (6ம் தேதி) நள்ளிரவு வரை அமலில் இருக்கும். அதற்குள் ஏர்இந்தியா இணையதள பக்கத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி விமான கட்டணங்களை பெற்று பயணிகள் பலனடையலாம் என்று ஏர்இந்தியா விமான நிறுவன அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

The post ஏர்இந்தியா விமானங்களில் உள்நாடு, வெளிநாடு டிக்கெட் கட்டணம் குறைப்பு: நாளை இரவு வரை முன்பதிவு சலுகை appeared first on Dinakaran.

Read Entire Article