ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு: சேலம் அருகே சோகம்

3 months ago 21

சேலம்,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த 2 பெண்கள் உட்பட மூன்று பேர் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 3 பேரும் ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். அவர்களை காப்பாற்றுவதற்காக அப்பகுதியை சேர்தவர்கள் வருவதற்குள் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்த ரேவதி, சிவஸ்ரீ, திவ்ய தர்ஷினி ஆகிய 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Read Entire Article