ஏரியில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

3 months ago 28
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே ஏரிக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கோட்டமருதூர் ஏரியில் சிலர் மீன் பிடிக்க வீசிய வலையில் இரண்டு சிறுவர்களின் சடலங்கள் கிடைத்தது குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மனம் பூண்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் எனத் தெரியவந்தது. அவர்களுடன் மற்றொரு சிறுவனும் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் 3வது சிறுவனின் சடலத்தையும் போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Read Entire Article