ஏரியல் அமைக்க மக்கள் கோரிக்கை சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் மன்னார்குடி அருகே செல்போன் டவரில் சிக்னல் இயந்திரம் திருட்டு

3 months ago 17

 

மன்னார்குடி,அக். 9: திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சித்திரையூர் தனியார் செல்போன் நிறுவன 120 அடி உயர டவர் உள்ளது. இந்த டவரில் திருவாரூர் புலிவலம் வடக்கு தெருவைச் சேர்ந்த தினேஷ்குமார்(25) என்பவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் செல்போன் டவரில் ஏறி அதிலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான சிக்னல் கண்ட்ரோல் இயந்திரம் ஒன்றை திருடி சென்றனர். இதனால், செல்போன் டவரில் சிக்னல் தடைபட்டதால் வாடிக்கையாளர்கள் பாதித்தனர்.
இதுகுறித்து, டவர் மேற்பார்வையாளர் ராஜமாணிக்கம் (64) என்பவர் வடபாதி மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இதில், அந்த செல்போன் டவரில் டெக்னீசியனாக வேலை பார்த்த தினேஷ்குமார், தனது நண்பர் குடவாசல் வேடம்பூரைச் சேர்ந்த கணேஷ்(23) அவரது சகோதரர் யோகேஷ்(22)என்பவருடன் சேர்ந்து சிக்னல் இயந்திரத்தை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து, தினேஷ்குமார், கணேஷ், யோகேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு லட்சம் மதிப்பிலான சிக்னல் இயந் திரத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

 

The post ஏரியல் அமைக்க மக்கள் கோரிக்கை சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் மன்னார்குடி அருகே செல்போன் டவரில் சிக்னல் இயந்திரம் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article