போச்சம்பள்ளி, அக்.19: தேசிய வேளாண்மை அபிவிருந்தி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில், புளியம்பட்டி ஊராட்சி திப்பனூர் ஏரியில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு ஏரியில் மீன் குஞ்சுகளை இருப்பு செய்தார். அப்போது, அவர் கூறுகையில், ‘பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட 14 ஏரிகளில் 3 லட்சத்து 82 ஆயிரம் மீன்கள் விடப்பட்டது. புளியம்பட்டி ஊராட்சி திப்பனூர் மற்றும் கெங்கிநாயகன்பட்டி ஏரிகளில் மீன்குஞ்சுகளை விடப்பட்டு வருகிறது. மீனவர்களுக்கு அறுவடை காலங்களில் உதவியாக இருக்கும்,’ என்றார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரத்தினம், ஆய்வாளர் கதிர்வேல், பவதாரண்யா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post ஏரிகளில் 3.82 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு appeared first on Dinakaran.