ஏரல்,ஜன.4: ஏரல் காவல் நிலையம் அருகே சூசையப்பர் கோயிலுக்கு பாத்தியப்பட்ட சகல மோட்சவாசல் குருசடியில் புத்தாண்டு வழிபாடு நடந்தது. ஆண்டின் முதல் நாளில் புனித சூசையப்பர் கோயில் குடும்பத்தை சார்ந்த அவைரும் மேளதாளங்களுடன் பவனியாக வந்து வரம் வேண்டுவர். இந்த ஆண்டும் அதேபோல் கலந்து கொண்ட மக்கள் அனைத்து சமுதாய மக்களுக்காகவும் வேண்டுதல் நடத்தியும், கடந்த ஆண்டு ஏரல் பகுதியை மழை,வெள்ளத்தில் இருந்து காப்பாற்றியதற்காகவும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து ஜெபம் செய்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் சூசையப்பர் கோயிலை சேர்ந்த திருக்குடும்ப சபையார் இங்கு வந்து ஜெபமாலை வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை ஏரல் பரதர் நல ஊர்க் கமிட்டியினர் மற்றும் பங்குதந்தை ரவீந்திரன் பர்னாந்து ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.
The post ஏரல் குருசடியில் புத்தாண்டு வழிபாடு appeared first on Dinakaran.