ஏரலில் உயர்மட்ட பாலத்தை அடுத்து தரைப்பாலமும் சேதம்: 4வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

4 weeks ago 6

ஸ்ரீவைகுண்டம்: தாமிரபரணி ஆற்றில் மழைவெள்ளம் குறைந்து வரும் நிலையில் ஏரலில் தரைமட்ட பாலம் சேதம் அடைந்திருப்பதால் 4வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது ஏரல் உயர்மட்ட பாலம் துண்டிக்கப்பட்டது. இதனால் உயர்மட்ட பாலத்தின் கீழ் உள்ள தற்காலிகமாக தரைமட்டம் பாலம் வழியாக போக்குவரத்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முதல் மழை குறைந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் குறைந்தது. ஆனால் ஏரல் தரைமட்டபாலமும் சேதமடைந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே உயர்மட்ட பாலம் கடந்த மழை வெள்ளத்தில் உடைந்த நிலையில் தற்போது தரைமட்ட பாலமும் சேதமடைந்திருப்பதால் ஆழ்வார் திருநகர், குரும்பூர் வழித்தடங்களில் ஏற்பட்டுவரும் போக்குவரத்து 4வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பள்ளிக்கு வரும் சாலையிலும் முழங்கால் அளவு தண்ணீர் சூழ்ந்திருப்பதால் 3 நாட்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவர்கள் தண்ணீரில் நனைந்தபடி பள்ளிக்கு சென்றனர் மேலும் அரையாண்டு தேர்வுகள் தொடங்கிய நிலையில் மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களிலும், தண்ணீரில் நடந்தும் சென்று சேர்ந்தனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்திலும் சாலையிலும் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

The post ஏரலில் உயர்மட்ட பாலத்தை அடுத்து தரைப்பாலமும் சேதம்: 4வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article