
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே!
பெரும்பாலும் மற்றவரிடம் இனிமையாகவும் நாகரிகமாகவும் பேசி பழகுபவர்கள் நீங்கள் என்பதால் உங்களிடம் மனம் விட்டு பேசக் கூடிய உங்கள் நலம் விரும்பிகள் உங்களைச் சுற்றி நிறையவே இருப்பார்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஒருவரினால் தொல்லை ஏற்படும். ஆதலால், மற்றவர்களுடன் அதிக நெருக்கம் வேண்டாம். சொந்த தொழில் செய்யும் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலை விரிவாக்க அதிக பணியாளர்களை நியமிப்பீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். ஆதலால் சீக்கிரம் நடவடிக்கைகள் தேவை. மாணவர்களுக்கு அதிக கவனம் தேவைப்படும். பொழுதுபோக்குகளை குறைக்கவும். உடல் நலம் சிறப்படையும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு உப்பு மிளகு வைக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே!
நீங்கள், பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இலக்கிய பிரியவர்களாக விளங்கும் நீங்கள், இசை, கவிதை, நடனம், பாடல் போன்றவற்றில் தனித்திறமையும் ஆர்வமும் கொண்வர்களாக விளங்குவீர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். அதனை சரிவர முடித்துக் காண்பிப்பீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தாங்கள் கேட்ட தொகையை வங்கி கடன்மூலம் பெறுவீர்கள். குடும்ப தலைவிகளுக்கு வேலை சுமை குறையும். விடுமுறைக்கு தாய் வீட்டிற்கு செல்வீர்கள். தங்கள் கணவர் தங்களுக்கு உதவுவார்.
மாணவ மணிகளுக்கு உயர் படிப்பிற்கான முயற்சிகள் நடைபெறும். தேக வசீகரம் கூடும்.
பரிகாரம்
வெள்ளிக்கிழமை அன்று அருகில் உள்ள எந்த அம்மன் கோயிலாக இருந்தாலும் பரவாயில்லை. அங்கு சென்று முல்லை மலர் மாலையை சாற்றுவது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே!
அமைதியான தோற்றமும் அலட்டிக் கொள்ளாத இயல்பான மனநிலையும் பிறரிடம் அன்பு செலுத்தக் கூடியவர் என்ற நற்பெயரையும் பெற்றவர்கள் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு இடமாற்றம் நடைபெறும். தாங்கள் கேட்ட இடத்திற்கு வேலை கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்று தங்கள் தொழிலை விரிவு படுத்துவீர்கள்.
குடும்பத் தலைவிகளுக்கு தங்கள் பிள்ளைகளின் சம்பாத்தியமும் ஒரு பங்கு கிடைக்கும். தம்பதிகளிலேயே விட்டுக் கொடுக்கும் போக்கு உண்டாகும்.
மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடி நல்ல மதிப்பெண்களைப் பெற பாடுபடுவீர்கள். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை அன்று துர்கா தேவி அம்மனுக்கு அரளிப்பூ மாலை சாற்றுவது நல்லது.
கடகம்
கடக ராசி அன்பர்களே!
எந்த ஒரு முயற்சியிலும் ஈடுபட்டு விடா முயற்சியுடன் செயல்பட்டு அதில் வெற்றியைக் காண கூடியவர்கள். தேசப் பக்தியும் தெய்வ பக்தியும் மிகுதியாக கொண்டவர்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்கள் தங்கள் மூத்த மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெளியூர் பயணங்கள் ஏற்படும். அதன் மூலம் அதிக லாபமும் பெறுவீர்கள்.
குடும்ப தலைவிகளுக்கு தங்கள் மாமியாரிடம் நல் உறவு உண்டாகும். அவர் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார். பிள்ளையின் வரவால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.
மாணவ மணிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வெல்வீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்
காளி கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று அர்ச்சனை செய்வது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389