ஏப்.6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க பழனிசாமி தீவிர முயற்சி

1 month ago 13

சென்னை: ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா ஏப். 6-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

பிரதமர் மதுரை வரும்போது, விமான நிலையத்தில் அவரை சந்தித்து பேச அனுமதி கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக தலைமை தன்னை சந்தித்து பேசிய நிலையில், செங்கோட்டையனை அழைத்து பேசியிருப்பது பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக பிரதமருடன் பேச பழனிசாமி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article