ஏடிஎம்மில் விட்டு சென்ற பணம் ஒப்படைப்பு

3 weeks ago 5

 

சிவகங்கை, டிச.27: இளையான்குடி அருகே சாலையூரில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம்மில் கடந்த மாதம் பணம் எடுக்க சென்ற அஜய், பணம் வெளியே வரவில்லை என சென்று விட்டார். அவருக்கு பிறகு ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்த அகமது ஜலால் ஏடிஎம்மில் ரூ.10ஆயிரம் இருந்ததை பார்த்து அதை இளையான்குடி போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார்.

இதற்கிடையே தனக்கு பணம் வரவில்லை. ஆனால் கணக்கில் கழிக்கப்பட்டுள்ளது குறித்து வங்கியில் அஜய் புகாரளித்தார். இது குறித்து வங்கி நிர்வாகம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று அஜயின் தாய் மாரீஸ்வரியிடம் இளையான்குடி போலீஸ் ஸ்டேசனில் எஸ்ஐ சிவசுப்பு ரூ.10ஆயிரம் பணத்தை அளித்தார். மாரீஸ்வரி பணத்தை எடுத்து கொடுத்த அகமது ஜலாலுக்கு நன்றி தெரிவித்தார்.

The post ஏடிஎம்மில் விட்டு சென்ற பணம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article