ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவுக்கு 12 அமைச்சர் பதவிகளைத் தர பாஜக முடிவு..

4 months ago 12
மகாராஷ்டிராவில், முதலமைச்சர் பதவியை விட்டுத்தர ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 3 முக்கியத் துறைகள் உள்ளிட்ட 12 அமைச்சர் பதவிகளைத் தர பாஜக திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றம் 288 இடங்களைக் கொண்டுள்ளதால், முதலமைச்சர் உள்பட அதிகபட்சம் 43 பேர் கொண்ட அமைச்சரவையை அமைக்க முடியும். அதன்படி, அமைச்சரவையில் பாதி இடங்களை தனக்கு வைத்துக்கொண்டு, கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டேயின் சிவ சேனாவுக்கு, நகர்ப்புற வளர்ச்சி, பொதுப்பணித் துறை, நீர்வளத்துறை உள்ளிட்ட 12 துறைகளும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 9 துறைகளும் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Read Entire Article