ஏஐ உதவியுடன் பழங்கால கைப்பிரதிகள் டிஜிட்டல் மயம்

1 day ago 4

புதுடெல்லி: போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பண்டைய கால கையெழுத்து பிரதிகளை ஆவணப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்க வேண்டும். அதன் அடிப்படையில் கையெழுத்து பிரதி படங்களை தேடக்கூடிய உரையாக மாற்ற வேண்டும். அவற்றை பல்வேறு இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தளத்தை உருவாக்க வேண்டும்.

கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆவணப்படுத்துவதற்கான விரிவான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது அவசியமாகும். இதற்காக பாண்டுலிபி மித்ராக்கள் என்ற பெயரில் பணியாளர்களை நியமித்து அவர்களுக்கு பயற்சி அளிக்க வேண்டும் என அரசுக்கு அந்த குழு பரிந்துரை செய்துள்ளது.

The post ஏஐ உதவியுடன் பழங்கால கைப்பிரதிகள் டிஜிட்டல் மயம் appeared first on Dinakaran.

Read Entire Article