ஏ.ஆர்.ரகுமான் வழக்கு - அபராதம் செலுத்த இடைக்காலத் தடை

3 hours ago 3

டெல்லி,

பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர், ஏ.ஆர். ரகுமான் மற்றும் பொன்னியின் செல்வன் 2 படக்குழுவினருக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ரகுமான் "வீர ராஜா வீரா" பாடலில், தாகரின் தாத்தா மற்றும் தந்தை பாடிய "சிவ ஸ்துதி" பாடலின் சில பகுதிகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அதில் "சிவ ஸ்துதி" பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு அதை தழுவி வீரா ராஜா வீரா பாடலை உருவாக்கியதாக ஏ.ஆர்.ரகுமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட்டு தனி நீதிபதி, பொன்னியின் செல்வன் படத்தின் வீரா ராஜா வீரா பாடல் 'சிவ ஸ்துதி' பாடலைப்போலவே உள்ளது எனவும் பதிப்புரிமை மீறல் தொடர்பாக 2 கோடி ரூபாய் தொகையை டெல்லி ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இசையமைப்பாளர் ரகுமான், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் செலுத்த வேண்டும் எனவும் 2 லட்ச ரூபாயை தாகருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

அந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.ரகுமான் தாக்கல் செய்த மனு, டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஹரி சங்கர் மற்றும் அஜய் திக்ப்பால் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஐகோர்ட்டு தனிநீதிபதியின் முந்தைய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article