ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்

7 months ago 18

சென்னை,

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் 'தர்பார்'. இப்படத்துக்குப் பிறகு 3 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த முருகதாஸ் தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை தொடங்கியுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்.கே.23' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட படத்தில் நடித்த ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிறார்.

மேலும் வித்யூத் ஜம்வால், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. 90 சதவீதம் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை வருகின்ற 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான பணிகளை படக்குழுவினர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 

 

Read Entire Article