
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் அப்டேட் ஒன்றை இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
'உங்களின் காத்திருப்பு இப்போது முடிகிறது. மிகப்பெரிய அப்டேட்களுக்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற 17-ந் தேதி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.