எஸ்.ஏ.டி20 லீக்: சாம்பியன் பட்டம் வென்ற எம்.ஐ.கேப்டவுன்

20 hours ago 2

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்க உள்ளூர் தொடரான எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3-வது சீசன் நடைபெற்றது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டன. இதில் லீக் மற்றும் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் முடிவில் எம்.ஐ.கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.இதில் சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தி உள்ளது. இந்நிலையில், எம்.ஐ.கேப்டவுன் - சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது . இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற எம்.ஐ.கேப்டவுன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய எம்.ஐ.கேப்டவுன் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கானர் எஸ்டெர்ஹுய்சென் 39 ரன்கள் , டெவால்ட் ப்ரீவிஸ் 38 ரன்கள் , ரிக்கல்டன் 33 ரன்கள் எடுத்தனர் .

தொடர்ந்து 182 ரன்கள் இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் , எம்.ஐ.கேப்டவுன் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியமால் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. இதனால் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் 18.4 ஓவர்கள் முடிவில் 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எம்.ஐ.கேப்டவுன்அணியில் ரபாடா  4 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .

இதனால் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற எம்.ஐ.கேப்டவுன் அணி சாம்பியன் பட்டம் வென்ற்து.

Read Entire Article