![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38586333-ytfj.webp)
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பட்டான் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நேற்று காலை 15 வயது சிறுமி தனது வீட்டில் இருந்தார். சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர்.
அப்போது, அந்த வீட்டிற்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த 21 வயது இளைஞனான லவ்லேஷ், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
தனக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தலைமறைவாக உள்ள இளைஞனை தேடி வருகின்றனர்.