கேப்டவுன்,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 லீக் தொடரான ஐ.பி.எல். போன்று தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. இதன் 3-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதன் லீக் சுற்று ஆட்டங்கள் கடந்த 2-ம் தேதியுடன் நிறைவடைந்தன.
லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த பார்ல் ராயல்ஸ், எம்.ஐ.கேப்டவுன், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. பிளே ஆப் சுற்று இன்று ஆரம்பமாக உள்ளது.
இதில் இன்று நடைபெறும் குவாலிபயர் 1 ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோதுகின்றன.
நாளை நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் - ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன இதனையடுத்து 6-ம் தேதி குவாலிபயர் -2 மற்றும் 8-ம் தேதி இறுதிப்போட்டி ஆகியவை நடைபெற உள்ளன.