சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், எழுத்து தமிழிலக்கிய அமைப்பின் அறங்காவலர் குழு தலைவருமான ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு, ‘சவுந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு’ எனும் பெயரில் ஆண்டுதோறும் நாவல் போட்டி நடத்தி வருகிறது. தகுதியான நடுவர் குழு நியமிக்கப்பட்டு நடுவர் குழுவும், அறங்காவலர் குழுவும் இணைந்து தேர்வு செய்யும் நாவலுக்கு ரூ,2,00,000 பரிசு வழங்கி வருகிறது. கடந்த 2023ம் ஆண்டிற்கு எழுத்தாளர்கள் அகர முதல்வன், கடற்கரய், பேராசிரியை பாரதி ஆகியோர் நடுவர்களாக இருந்து எழுத்து அறங்காவலர் குழுவுடன் இணைந்து எழுத்தாளர் ஆசு எழுதிய ‘பஞ்சவர்ணம்’ எனும் நாவலைப் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்துள்ளனர்.
இதற்கான பரிசளிப்பு விழா வரும் 28ம்தேதி திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை தி.நகர் வாணி மகாலில் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பரிசளிப்பு விழாவுக்கு, ப.சிதம்பரம் எம்பி தலைமை வகித்து உரையாற்றுகிறார். சேது. சொக்கலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். கவிப்பேரரசு வைரமுத்து நூலை வெளியிட்டு பேரூரையாற்றுகிறார். நடுவர் குழு சார்பாக எழுத்தாளர் அகரமுதல்வன் அறிமுக உரையாற்றுகிறார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் நூல் மதிப்புரையாற்றுகிறார். கவிஞர் இலக்கியா நடராஜன் நன்றியுரையாற்றுகிறார்.
The post எழுத்து தமிழிலக்கிய அமைப்பின் சார்பில் சென்னையில் 28ம் தேதி நாவல் பரிசளிப்பு விழா: ப.சிதம்பரம் அறிவிப்பு appeared first on Dinakaran.