உடன்குடி, ஜன. 19: உடன்குடி அருகேயுள்ள எள்ளுவிளையில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. ஒன்றிய பொதுச்செயலாளர் கேசவன் தலைமை வகித்தார். இதில் இந்து முன்னணி கமிட்டி இருக்கும் கிராமங்களில் வாரம்தோறும் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிராமங்களில் பழைய கொடிக்கம்பங்களில் இந்து முன்னணியின் புதிய கொடியேற்ற வேண்டும். கரிசன்விளை, எள்ளுவிளை ஆகிய கிராமங்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தினசரி மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு இந்து மதம் மற்றும் புராண கதைகளை சொல்ல வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவர் சதீஷ், பொதுச்செயலாளர் பால்துரை, செயலாளர்கள் கிருபாகரன், கணேசன், பொருளாளர் தனபால், ரவி, பொன்ராஜ், சல்மோன், தனகோபால், ஜெயசூர்யா, மாரிமுத்து, சுபாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
The post எள்ளுவிளையில் இந்து முன்னணி கூட்டம் appeared first on Dinakaran.