
இஸ்லாமாபாத்,
பஹல்காம் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என பாகிஸ்தான் மீண்டும் கூறியுள்ளது.
இது குறித்து அந்த நாட்டின் ராணுவ மந்திரி குவாஜா ஆசிப் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்' என தெரிவித்தார்.
அரசியல் ஆதாயத்துக்காக இந்த பிராந்தியத்தை அணு ஆயுத போருக்கு தள்ளுவதாக பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டிய ஆசிப், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மற்றும் பலுசிஸ்தானில் இந்தியா பயங்கரவாதத்தில் ஈடுபடுவதாகவும் அபாண்டமாக பழி சுமத்தினார்.