எல்லை பாதுகாப்பு படையில் 275 கான்ஸ்டபிள்கள்

3 weeks ago 5

பணி: Constable (General Duty- Sports Quota-2024).
விளையாட்டு பிரிவு வாரியாக காலியிடங்கள் விவரம்: Athletics-29, Archery-6, Badminton-8, Swimming-34, Diving-6, Water Polo-2, Basket Ball- 14, Boxing-12, Cycling-8, Cross Country-2, Equestrian-10, Gymanstics-12, Hand Ball-14, Hockey-11, Ice Sking-6, Judo-6, Karate-7, Volley Ball-14, Weight Lifting-8, Water Sports-12, Wrestling-14, Shooting-8, Taekwonda-11, Wushu-11, Fencing-6, Football-4.

வயது: 30.12.2024 தேதியின்படி 18 முதல் 23க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசியினருக்கு தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரரின் விளையாட்டு திறன், உடற்தகுதி, மருத்துவ தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 30.12.2022ம் ஆண்டிற்கு பிந்தைய விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

சம்பளம்: ரூ.21,700-69,100.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விளையாட்டுப் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் தேசிய/மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: i) ஆண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 170 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி- 162.5 செ.மீ) மேலும் சாதாரண நிலையில் மார்பளவு 80 செ.மீ., அகலம், விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.

ii) பெண் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். (எஸ்டி- 150 செ.மீ).
கட்டணம்: ரூ.148/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.rectt.bsf.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2024.

The post எல்லை பாதுகாப்பு படையில் 275 கான்ஸ்டபிள்கள் appeared first on Dinakaran.

Read Entire Article