
இஸ்லாமாபாத்,
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தியா மட்டுமின்றி, சர்வதேச அளவில் இந்த தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை எல்லை தாண்டி வந்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ளது. பிடிபட்ட வீரரின் பெயர் பி.கே.சிங் என்பதும், அவர் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக 17 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து துப்பாக்கி, வாக்கி டாக்கி ஆகியவற்றை பாகிஸ்தான் ராணுவத்தின் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் அருகே அவர் எல்லை தாண்டி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரை பத்திரமாக மீட்டு அழைத்து வருவது குறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.