
சென்னை,
மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'லூசிபர்' படத்தின் 2-ம் பாகமாக உருவான 'எல் 2 எம்புரான்' கடந்த 27-ம் தேதி வெளியானது. மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், பிருத்விராஜுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதாவது, கோல்ட், ஜன கண மன, மற்றும் கடுவா ஆகிய மூன்று படங்களை கடைசியாக பிருத்விராஜ் தயாரித்து நடித்திருந்தார்.
இதில், பிருத்விராஜ் ஒரு நடிகருக்கான சம்பளத்தை பெறவில்லை. அதற்கு பதிலாக, அவர் ஒரு இணை தயாரிப்பாளராக சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அதன்படி, இணை தயாரிப்பாளராக பிருத்விராஜ் சுமார் ரூ. 40 கோடி பெற்றதாக தெரிகிறது. இதனையடுத்து இந்த 3 படங்களின் வருமான கணக்குகளை கேட்டு வருமான வரித்துறை பிருத்விராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கு வருகிற 29-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.