எல்­லோ­ருக்­கும் கல்வி கொடுக்­கப்­பட வேண்­டும் எனும் நபி­கள் வாக்­கி­னைத்­தான் திமுக நிறை­வேற்றி வரு­கி­றது: சென்னையில் நடந்த விழாவில் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு

1 week ago 3

சென்னை: சென்னை ராயப்­பேட்டை புதுக்­கல்­லூ­ரி­யில், `தமிழ்­நாடு இஸ்­லா­மி­யக் கல்வி நிறு­வ­னங்­க­ளுக்­கான கூட்டமைப்பு ‘ஓமிட்” பொன் விழா ஆண்டு நிகழ்ச்­சி­ நடந்தது. இதனை துணை முத­ல்வர் உத­ய­நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்­தார். விழா­வில், இக்­கூட்­ட­மைப்­பின் சார்­பில், 12 இஸ்­லா­மிய கல்வி அறி­ஞர்­கள் உட்­பட 13 ஆளு­மை­க­ளுக்கு வாழ்­நாள் சாத­னை­யா­ளர் விரு­து­களையும் அவர் வழங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

பல சம­யங்­க­ளில் இஸ்­லா­மிய கல்வி நிறுவனங்களுக்கு மட்­டு­மல்ல, பிற கல்வி நிறு­வ­னங்­க­ளின் உரி­மைக்கு குரல் கொடுப்­ப­தும் நீங்­கள்­தான் என்­றுச் சொன்­னால் அது­வும் மிகை­யா­காது. நபி­கள் நாய­கம் கூறிய வாழ்க்கை நெறி­மு­றை­க­ளில், முக்­கி­ய­மான ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கற்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வ­னாக இரு அல்­லது கற்­பிப்­ப­வர்­க­ளுக்கு உதவி செய்­ப­வ­னாக இரு. இந்த மூன்­றை­யும் தவிர நான்­கா­வது நப­ராக கண்­டிப்­பாக இருந்து விடாதே என்பது தான் நபி­கள் நாய­கம் சொன்ன வார்த்தை. ஒரு முஸ்­லிம் தானும் கல்வி கற்று, பிற­ருக்­கும் கல்வி கற்­றுக் கொடுப்­பதே தான தர்­மங்­க­ளில் சிறந்­த­தா­கும் என்று நபி­கள் நாய­கம் கூறி­யி­ருக்­கி­றார்.

எல்­லோ­ருக்­கும் கல்வி கொடுக்­கப்­பட வேண்­டும் என்று நபி­கள் சொன்­னார்­. அதைத்­தான் நம் திமுகவும் தொடர்ந்து இந்த மண்­ணிலே சொல்லி வரு­கி­றது, செய்து வரு­கி­றது. இப்­போ­து­கூட, பிற்­ப­டுத்­தப்­பட்ட, ஒடுக்கப்பட்ட மக்­க­ளின் கல்வி உரி­மை­யைப் பாது­காக்­கத்­தான் திமுக அரசு தொடர்ந்து பாடு­பட்­டுக்­கொண்டு இருக்­கி­றது. தமிழ்­நாட்­டின் கல்வி வளர்ச்­சி­யில், இஸ்­லா­மிய, கிறிஸ்­துவ கல்வி நிறு­வ­னங்­க­ளின் பங்கு மிகப்பெரியது. இஸ்­லா­மிய மக்­கள் கல்வி கற்று, வேலை­வாய்ப்­பும் பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில்­ தான் கலை­ஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்­கீட்­டினை வழங்­கி­னார்­. ‘எல்­லோ­ருக்­கும் எல்­லாம்’ என்­கின்ற அந்த உயர்ந்த தத்­து­வத்­தின் அடிப்­ப­டை­யில் நடக்­கும் அர­சு­தான் நம் திரா­விட மாடல் அரசு.

ஆனால், எல்லோருக்கும் எல்­லாம் கிடைக்­கக்­கூடாது என்று நினைப்­ப­வர்­கள் நம் திரா­விட மாடல் அர­சிற்கு பல நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். குறிப்­பாக, இப்­போது மாநில அர­சின் அனு­மதி இல்­லா­மல் ஒன்­றிய அரசே பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்கு துணை வேந்­தர்­களை நிய­மிக்­க­லாம் என்ற ஒரு வரைவை யுஜிசி மூலம் கொண்­டு­வர திட்­ட­மிட்­டுள்­ளார்­கள். இந்த யுஜிசி விதி­மு­றை­க­ளுக்கு எதி­ரா­க சட்­ட­மன்­றத்­தில் முத­ல்வர் மு.க.ஸ்டாலின் தீர்­மா­னமே நிறைவேற்றியிருக்கிறார். அது­மட்­டு­மல்ல, வக்பு வாரிய திருத்த மசோ­தா­வை­யும் ஒன்­றிய அரசு கொண்டு வர முயற்­சிக்­கி­றார்­கள்.

பாரா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­வில் திமுக கூட்­டணி எம்.பி.க்கள் இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரு­கி­றார்­கள். அத­னால் கிட்­டத்­தட்ட 10 எம்.பி.க்களை என்ன, ஏது என்று கேட்­கா­மலே பா.ஜ.க ஒன்­றிய அரசு தற்­கா­லிக இடை நீக்­க­மும் செய்து இருக்­கி­றது. ஆனா­லும், நம் முத­ல்வர் இஸ்­லா­மிய மக்­களை பாதிக்­கின்ற, அந்த முடிவை உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும் என்று உறுதியோடு செயல்­பட்டு வரு­கி­றார். ஏனென்­றால், திமுகவின் வர­லாறு அப்­படி. பல கோரிக்­கை­களை அரசுக்கு நீங்­கள் வைத்து இருக்­கி­றீர்­கள். நிச்­ச­ய­மாக இந்த கோரிக்­கை­களை முத­ல்வரின் கவ­னத்­திற்கு எடுத்­துச் சென்று நீங்­கள் எந்த உரி­மை­யோடு சொன்­னீர்­களோ, அதே உரி­மை­யோடு நாங்­கள் நிறை­வேற்­றித் தரு­வோம், நம் முத­ல்வர் நிறை­வேற்­றித் தரு­வார். நம் திரா­விட மாடல் அரசு நிறை­வேற்றி தரும் என்ற வாக்­கு­று­தியை இங்கு கொடுக்க விரும்­பு­கி­றேன். இஸ்­லா­மிய மக்­க­ளின் பாது­காப்­புக்­கும், உங்­க­ளின் கல்வி மற்­றும் வேலை­வாய்ப்­புக்­கும் திமுக என்­றைக்­கும் துணை நிற்­கும். அய­ராது பாடு­ப­டும்.இவ்­வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பாத்திமா முசாபர் தொகுத்து வழங்கினார். அமைச்­சர் கோவி.செழி­யன், வக்பு வாரி­ய தலை­வ­ர் நவாஸ் கனி எம்பி, தமிழ்­நாடு ஹஜ் கமிட்­டி தலை­வ­ர் அப்­துல் சமது எம்எல்ஏ, சென்னை மேற்கு மாவட்­ட திமுக செய­லா­ள­ர் நே.சிற்­ற­ரசு, பகுதி செய­லா­ள­ர் எஸ். மதன்­மோ­கன், இஸ்­லா­மிய கல்வி நிறு­வ­னங்­கள் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் தலை­வர் ஆசிம், பொதுச் செய­லா­ளர் அக­மத் மீரான் உள்­பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post எல்­லோ­ருக்­கும் கல்வி கொடுக்­கப்­பட வேண்­டும் எனும் நபி­கள் வாக்­கி­னைத்­தான் திமுக நிறை­வேற்றி வரு­கி­றது: சென்னையில் நடந்த விழாவில் உத­ய­நிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article