‘எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் மோடி அரசியல் செய்ய முடியாது’

2 weeks ago 2

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்பி பேசியதாவது: மாணவர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்றால்தான் நாடு நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும். இவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தருவது நல்ல ஆட்சியாளர்கள், அரசின் கடமை.

காலணிகள் முதல் லேப்டாப் வரை அவர்களுக்கு தேவையானதை ஜெயலலிதா வழங்கினார். அவர் மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி இதனை தொடர்ந்து செய்து வந்தார். தற்போது கட்சி ஆரம்பிப்போர் யாராக இருந்தாலும் எம்ஜிஆரைபோல் ஆட்சி அமைப்போம் என கூறுகின்றனர். பிரதமர் உட்பட எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் தற்போது யாரும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post ‘எம்ஜிஆர் பெயரை சொல்லாமல் மோடி அரசியல் செய்ய முடியாது’ appeared first on Dinakaran.

Read Entire Article