பெரம்பூர்: கொடுங்கையூர் நாராயணசாமி தோட்டம், 2வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் அதிமுகவில் 34வது வட்ட செயலாளராக உள்ளார். இன்று எம்ஜிஆர் பிறந்த நாள் என்பதால் கொடுங்கையூர் சின்னாண்டி மடம் பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வர்ணம் பூசுவதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று காலை 11 மணிக்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு வர்ணம் பூசிக் கொண்டிருந்தார். அப்போது, அதிமுக முன்னாள் வட்ட செயலாளர் கனகராஜ், தனது ஆதரவாளர்களுடன் வந்து, ‘எனது ஏரியாவில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு நீ எப்படி வர்ணம் பூசலாம்’ என கூறி வெங்கடேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post எம்ஜிஆர் சிலைக்கு வர்ணம் பூசுவதில் மோதல் வட்ட செயலாளருக்கு அடி appeared first on Dinakaran.