எம்.ஜி.ஆர். தோற்றம் போன்று விஜய் படம்... தேனியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு

4 months ago 12

தேனி,

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு நேற்று பிறந்தது. தமிழகத்தில் ஆட்டம், பாட்டத்துடனும், பட்டாசுகள் வெடித்தும் புத்தாண்டை வரவேற்றனர். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டினர்.

அதன்படி, தேனி மாவட்டம் பெரியகுளத்திலும் பல்வேறு தரப்பினர் சார்பில் புத்தாண்டு வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒட்டியிருந்த சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. பெரியகுளம் நகர தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று நகரின் முக்கிய இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த சுவரொட்டியில், எம்.ஜி.ஆர். முக தோற்றம் போன்று விஜய் படத்தை வடிவமைத்து குறிப்பிட்டிருந்தனர். மேலும் அந்த சுவரொட்டியில், "2026-ல் தமிழகத்தை காக்க புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவதாரம் எடுக்கும் தளபதியே...' அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

Read Entire Article