எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் - அமைச்சர் எ.வ.வேலு

2 days ago 2

சென்னை,

தமிழ்நாடு சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். காரில் பயணிக்கும்போதெல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எம்.ஜி.ஆர் பாடலைத்தான் கேட்கிறார். தனது படம் வெளியானதும் எப்படி இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் முதலில் ஸ்டாலினிடம்தான் கேட்பார்.

ரஷியாவின் மொழியையும் பண்பாட்டையும் காக்க முற்பட்ட ஜோசப் ஸ்டாலினை அந்த நாட்டு மக்கள் இரும்பு மனிதர் என்று அழைத்தனர். நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க போர்க் குரல் எழுப்பக்கூடிய தமிழ்நாட்டின் இரும்பு மனிதராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார்.

இவ்வாறு அவர் புகழாரம் சூட்டினார். 

Read Entire Article