சென்னை,
நடிகர் வெங்கட் ராகுல், ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங், எடிட்டர் ஶ்ரீஜித்சாரங் தயாரிப்பில் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் 'எமகாதகி'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இறுதிக்கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
இப்படத்தில் ரூபா கொடுவயூர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் உமா மஹேஷ்வர உக்ரா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர். மேலும், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், சுபாஷ் ராமசாமி, ஹரிதா, பொற்கொடி, ஜெய், பிரதீப், ராமசாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஜெசின் ஜார்ஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இப்படத்தின் முதல் பாடலான 'உயிர் கூட்டுல' வெளியாகி இருக்கிறது. இதனை நடிகை அஞ்சலி வெளியிட்டுள்ளார்.