என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது: மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல்

3 hours ago 3

கலிபோர்னியா: உலகின் பெரும்பாலான நாடுகளில் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்பாட்டில் உள்ளது. ஏராளமானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பேஸ்புக்கிற்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகின்றன. அவற்றுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் பேஸ்புக்கிற்கு உள்ளது. இதில் உள்ள சவால்கள் குறித்து, அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், தன் சமீபத்திய நேர்காணலில் பேசியிருப்பதாவது: நாம் ஏற்காத சட்டங்கள் வெவ்வேறு நாடுகளில் உள்ளன. உதாரணமாக, முகமது நபியின் ஓவியத்தை பேஸ்புக்கில் யாரோ ஒருவர் வரைந்ததற்காக பாகிஸ்தானில் சிலர், எனக்கு மரண தண்டனை விதிக்க முயன்றனர்.

அது அவர்களின் கலாசாரத்தில் மதத்தை அவமதிக்கும் செயல் என்று கூறினர். இதற்காக என் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க தொடங்கினர். நான் பாகிஸ்தானுக்கு செல்ல போவதில்லை. அதனால் அதுபற்றி கவலைப்படவில்லை. உலகில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நாடுகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. வெளிநாட்டில் உள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை பாதுகாக்க அமெரிக்க அரசு உதவ வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

 

The post என்னை தூக்கில்போட முயற்சி நடந்தது: மார்க் ஜூக்கர்பெர்க் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article