'என் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் 12-த் பெயில்' - நடிகர் அன்சுமான் புஷ்கர்

4 months ago 8

சென்னை,

விது சோப்ரா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் தேதி வெளியான திரைப்படம் '12-த் பெயில்'. இந்தி, தமிழ், தெலுங்கு,கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. விக்ராந்த் மாஸ்ஸி, மேதா சங்கர், ஆனந்த் வி ஜோஷி, அன்சுமான் புஷ்கர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் மனோஜ்குமார் ஷர்மா ஐபிஎஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி ஸ்ரத்தா ஜோஷி ஐஆர்எஸ்ஸின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் அன்சுமான் புஷ்கர் 12-த் பெயில் தனது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

"12-த் பெயில் படத்தின் மூலம் எனக்கு ரசிகர்களிடமிருந்து மட்டுமில்லாமல் அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் கிடைத்தன. இப்படம் எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது' என்றார். நடிகர் அன்சுமான் புஷ்கர் கடைசியாக ஜியோ சினிமாவில் வெளியான மூன்வாக் வெப் தொடரில் நடித்திருந்தார்.

Read Entire Article