சென்னை: தவெக தலைவர் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னையில் அளித்த பேட்டி: ஜோசப் விஜய் அவர்களே நான் உங்களை ரொம்ப மதிக்கிறேன். உங்களை கூடப்பிறந்த தம்பி மாதிரிதான் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியில் சந்தித்தேன். நாம இரண்டு பேரும் அரை மணி நேரம் தனியாக பேசினோம். அப்போ நீங்க சொன்னீங்க. எனக்கு உலகம் முழுவதும் பேன்ஸ் இருக்காங்க.. ஆனால் எங்க வீட்டில் என் பையன் உங்களோட பேன் என்று சந்தோஷப்பட்டீங்க. நானும் ஹேப்பியா இருந்தேன். ரொம்ப அமைதியாக இருந்தவர் திடீர்னு பார்த்தால் மேடையில் பயங்கரமான டயலாக். பயங்கரமான வசனம் எல்லாம் பேசுகிறார். களத்திற்கு வாங்க. அப்போதுதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியும். மேடையில் பேசணும். ஆனால், டயலாக் மாதிரி அவர் அங்கிட்டு, இங்கிட்டு போறாரு… வர்றாரு. வீரபாண்டிய கட்ட பொம்மன் வசனம் எல்லாம் பேசுகிறார். மக்கள் பாதி பேர் ஏற்றுக்கலாம்.
கூட்டம் எனக்கும் கூடத்தான் கூடுது.. கூட்டத்தை வச்சி எதையுமே கணிக்க முடியாது. எனக்கும் ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருந்தாங்க. அதனால என்னுடைய அருமை தம்பி விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்க தயாராக இருக்கிறேன். அவர் தயாரா என்று கேட்டு சொல்லுங்க.. கட்சி ஆரம்பிக்க மாட்டேன். பெரிய கட்சி கூப்பிட்டால் போவேன். இல்ல என்றால் சுயேச்சையாகவும் நிற்க தயார். திமுகவில் சேர வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சேருவேன். திமுகவை எதிரி என்று சொல்வது எல்லாம் டயலாக் சொல்வது தான். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. அவர் மக்களுக்கு என்ன செய்ய போகிறார். அவர் கொள்கை என்ன அதை சொல்லாமல், நான் அவருக்கு எதிரி என்று சொல்லக் கூடாது. அவங்களை அழித்து விடுவேன் என்று சொல்வது ரொம்ப தப்பு. அவங்க எல்லாம் 50 வருட அனுபவம் உள்ளவர்கள். அவர்களின் அனுபவம் விஜய்யின் வயது. எடுத்தோம், கவுத்தோம். மேடையில் கூட்டம் இருக்கிறது. மக்கள் இருக்கிறார்கள் என்று எதுவுமே பேச வேண்டாம். மானசீகமாக தமிழக முதல்வரை நான் நேசிக்கிறேன்.
முதல்வரை பற்றி விஜய் பேசுவதை பார்த்து ரொம்ப வேதனைப்பட்டேன். அவர் முதலில் நடிகர்களுக்கும், டெக்னீசியன்களும் மற்றும் கலைஞர்களுக்கும் உதவி பண்ணட்டும். விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுப்பார்கள். எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பார்கள். கூட்டத்தை பார்த்து எதையுமே நாம் கணிக்க முடியாது. அரசியல் வேறு, வாக்காளர்கள் வேறு. எனக்கு விஜய்க்கு மேல கூட்டம் இருந்தது. நானும் கட்சி ஆரம்பித்தேன். எம்பிக்கு நின்னேன். எந்த கட்சி கூப்பிட்டாலும், கூப்பிடா விட்டாலும் சுயேச்சையாக தேர்தலில் நிற்பேன். அரசியல் ரீதியாக விஜய் எனக்கு எதிரி. மற்றப்படி ஒன்றும் கிடையாது. விஜய்யை எதிர்த்து பேசுகிறேன். அதனால், ஏற்படும் எதையும் நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், எனக்கும் கூட்டம் கூடும் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து நிற்பேன்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி appeared first on Dinakaran.