கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி 2022ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இவருடைய மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது. இதில் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக இறந்த மாணவியின் தாய் செல்வி, விசிக கடலூர் மாவட்ட செயலாளர் திராவிடமணி உள்பட 615 பேர் மீது கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு முதல் முறையாக மே 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 615 பேரும் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிதுறை நடுவர் எண்-2ல் ஆஜராக நீதிபதி ரீனா உத்தரவிட்டுள்ளார். வரலாற்றில் முதல் முறையாக ஒரு வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர், மே 15ம் தேதி ஆஜராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் மே 15ல் 615 பேர் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.