சென்னை,
மலையாளத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா, தமிழில் சரத்குமார் ஜோடியாக 'ஐயா' படத்தில் அறிமுகமானார். அதன்பின்னர், ரஜினிகாந்துக்கு ஜோடியாகி சந்திரமுகி படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பலரது புருவத்தை உயர வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, ஜெயராம், மம்முட்டி, சூர்யா, விஜய் உள்ளிட்ட டாப் நடிகர்கள் படத்தில் நடித்து முன்னணி கதாநாயகியாக நயன்தாரா உயர்ந்தார். இந்நிலையில், சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தை நயன்தாரா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சந்திரமுகி படத்தில் எனது முதல் நாளின் முதல் காட்சி ரஜினி சாருடன் இருந்தது. அப்போது அவர் மிகப்பெரிய நடிகர் என்று எனக்கு தெரியாது. அதுதான் எனக்கு மிகவும் உதவியது என்று நினைக்கிறேன். ஏனென்றால் அது எனக்கு ஒருவேளை தெரிந்திருந்தால் பயம் வந்திருக்கும். நட்சத்திர அந்தஸ்தைப் பற்றி அறியாமை எனக்கு மிகவும் உதவியது' என்றார்.